Skip to main content

Posts

Featured

குழப்பம் விளைவிக்கும் ‘கூகுள் டாக்டர்’

என் நண்பர் ஒருவருக்கு வயிற்று வலி. மூன்று நாளுக்கு மேல் வலி தொடர்ந்தது. ஆனாலும் அவர் மருத்துவரிடம் போகவில்லை. அலுவலகத்தில் இருக்கும்போதே இணையத்தில் வயிற்று வலி பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படித் தேடிய ஒரு தளத்தில், வயிற்றுவலி தொடர்பான மேலும் சில அறிகுறிகளைப் பட்டியல் இட்டிருந் தார்கள். நண்பருக்கு அனைத்தும் இருப்பதுபோல் ஒரு பிரமை சூழ்ந்தது. இறுதியில் அவருடைய வயிற்றில் கேன்சர் இருப்பதாக, அவரே உறுதி செய்துகொண்டு நேராகப் புற்றுநோய் நிபுணரிடம் சென்றுவிட்டார். பல பரிசோதனைகள், பல மருத்துவர் களைக் கண்ட பின் அவருக்கு இருந்தது வாயுத் தொல்லை என்றும், அத்துடன் லேசாக வயிற்றுப் புண்ணும் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய மருந்துகளைச் சாப்பிட்ட சில வாரங்களில் அவருக்குச் சரியாகிவிட்டது. ஆனால், அவருடைய அதீதப் பயத்தைப் போக்கத்தான் இப்பொழுது மனநல மருத்துவரிடம் போய்க்கொண்டிருக்கிறார். இந்த அவலம் தேவையா?
மாறாத வதந்திகள் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்று உலகையே சிறு கிராமமாக்கி விட்டது. சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட் போன், வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் வருகையால், விரல் நுனிய…

Latest Posts